கீழடி
வாசக பெருமக்களுக்கு என் தமிழ் வணக்கங்கள்!!!
நாம் தமிழ் கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த மொழின்னு பெருமை பேசுறோம், ஆனால் சிலர் இல்ல, பலர் அதற்கான ஆதாரம் இருக்கானு கேட்கிறார்கள். நாம் சொல்லலாம் சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள், கட்டிட கலை , எவ்ளோவோ சொன்னாலும் ஆதார பூர்வமான எந்த விடயமும் நம்மிடம் இல்லை. காரணம், பல நூற்றாண்டு க்கு முன் வந்த ஆரிய படையெடுப்பு, முகலாயர்கள் படையெடுப்பு. பிரெஞ்சு நாடு, டச்சு நாடு ஆங்கிலேயர்கள் போன்ற பலர் படையெடுவந்தது மட்டுமல்ல, இயற்க்கை சீற்றம் என பல பிரச்னை பிறகும், தமிழ் வாழ்வதே பெரிய விடயம். இப்படி இருக்கும் நிலையில் ஆதாரம் எப்படி கிடைக்கும், சரி ஆராய்ச்சி பண்ணி சொல்லலாம் னா அதுக்கு தமிழ் நாடு அரசு பக்கம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காது. இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தொல்லியல் ஆய்வு என்று பார்த்தல், அது அரிக்கமேடு,ஆதிச்சநல்லூர், மற்றும் கீழடி. இதில் முதல் இரண்டு ஆய்வும் நடத்தப்பட்டது சாதாரண நிலப்பரப்பில், ஆனால் கீழடி ஆய்வு, நதிக்கரையில் நடத்தப்பட்டது.
சரி விஷயத்துக்கு வருவோம்.
2013-14 ஆம் ஆண்டில், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகாய் நதி பள்ளத்தாக்கின் 293 இடங்களில் இந்திய தொல்பொருள் ஆய்வு ஆய்வாளர் (ஏஎஸ்ஐ) நடத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் கீழடி , கீழடியின் பள்ளிச்சந்தை திடலில் அகழ்வின் இரண்டாம் கட்டத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் எச்டிஎஸ்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. வைஜியின் கரையில் ஒரு புராதன நாகரிகத்தை காட்டியது.
வாசக பெருமக்களுக்கு என் தமிழ் வணக்கங்கள்!!!
நாம் தமிழ் கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த மொழின்னு பெருமை பேசுறோம், ஆனால் சிலர் இல்ல, பலர் அதற்கான ஆதாரம் இருக்கானு கேட்கிறார்கள். நாம் சொல்லலாம் சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள், கட்டிட கலை , எவ்ளோவோ சொன்னாலும் ஆதார பூர்வமான எந்த விடயமும் நம்மிடம் இல்லை. காரணம், பல நூற்றாண்டு க்கு முன் வந்த ஆரிய படையெடுப்பு, முகலாயர்கள் படையெடுப்பு. பிரெஞ்சு நாடு, டச்சு நாடு ஆங்கிலேயர்கள் போன்ற பலர் படையெடுவந்தது மட்டுமல்ல, இயற்க்கை சீற்றம் என பல பிரச்னை பிறகும், தமிழ் வாழ்வதே பெரிய விடயம். இப்படி இருக்கும் நிலையில் ஆதாரம் எப்படி கிடைக்கும், சரி ஆராய்ச்சி பண்ணி சொல்லலாம் னா அதுக்கு தமிழ் நாடு அரசு பக்கம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காது. இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தொல்லியல் ஆய்வு என்று பார்த்தல், அது அரிக்கமேடு,ஆதிச்சநல்லூர், மற்றும் கீழடி. இதில் முதல் இரண்டு ஆய்வும் நடத்தப்பட்டது சாதாரண நிலப்பரப்பில், ஆனால் கீழடி ஆய்வு, நதிக்கரையில் நடத்தப்பட்டது.
சரி விஷயத்துக்கு வருவோம்.
பிப்ரவரி 2017 ல் கீஹாடி தளத்தில் காணப்பட்ட கரியின் கார்பன் டேட்டிங் கி.மு. 200 ல் இருந்த குடியேற்றத்தை உறுதிப்படுத்தியது. இவ்வாறு அகழ்வாராய்ச்சிகள் சங்கம் வயதில் இருந்து நகர்ப்புற நாகரிகம் தமிழ்நாட்டில் இருந்ததை நிரூபித்தது.
மூன்று மாத காலப்பகுதியில் அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டு,
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 40 லட்சம் வரை அனுமதிக்கப்படும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேற்பார்வை பணியாளர் பணிஇடைமாற்றம்:
இதற்கிடையில், கீழடியில் உள்ள அகழ்வாராய்வின் மேற்பார்வைப் பணிப்பாளராக இருந்த தொல்பொருளியல் ஆய்வாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா ASI அகழ்வாய்வுக் கிளை (பெங்களூரு) பணிஇடைமாற்றம் செய்யப்பட்டது தமிழகத்தில் ஒரு புயலை கிளப்பியது.
அமர்நாத் அறிக்கை:
திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் (கீழடி முன்னாள் மேற்பார்வையாளர்)
கூறியதாவது: நதிக்கரை நாகரிகத்தை பற்றி தீர்மானித்ததால் மட்டுமே, தமிழ்நாட்டின் வரலாற்றை பற்றி அறிய முடியும் என்று எண்ணினார்.
நதிக்கரை தொடங்கும் வள்ளிமலை முதல் கடலில் கலக்கும் ஆற்றங்கரை
வரை மொத்தம் 209 KM வரை நீளம் உள்ளது என்று கூறினார். இதில்
5 மாவட்டங்கள் வருகிறது என்றும், அவையாவன,
தேனி, திண்டுக்கல், மதுரை,
சிவகங்கை,இராமநாதபுரம்.
நதியின் இருபுறமும் 8கிம் சுற்றளவு மட்டுமே ஆராய்ச்சி நடத்தினார்.
இதில் 293 இடங்களில் தொல்லியல் பொருள்கள் கிடைத்தது. 110 ஏக்கர் (4 1/2 KM) சுற்றளவுக்கு 2016 -ல் ஆராய்ச்சி தொடங்கினார். ஆரம்பம் முதலே வியக்க தகு ஆதாரங்கள் கிடைத்தன என்றும்
நகரம் போன்ற இடங்கள் கிடைத்தன என்றும் கூறினார். மேலும் ஆய்வு செய்யும் முன் அவர் பணி
இடமாற்றம் செய்யப்பட்டார்.
திரு. அரசு அவர்களின் அறிக்கை:
இதை பற்றி சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் திரு அரசு கூறுகையில், 1924-ம் வருடம் சிந்து சமவெளி நாகரிகத்தை ஆசிய நிலப்பரப்பில் கண்டுபிடிக்கின்றனர்.அங்கு
கிடைத்த பொருட்கள், கட்டிட கலைகள், அங்கு
கிடைத்த முத்திரைகள் அனைத்தும் விவாத பொருளாக மாறியது.இந்த நதிக்கரை நாகரிகம் திராவிட
நாகரிகத்தை அடிப்படையாக கொண்டு உள்ளன என்று ஐராவத மஹாதேவன் அவர்களுள் கூறியுள்ளார்
என்று தெரிவித்தார்.
மேலும்,
1940-ல் அரிக்கமேடு (பாண்டி) அகழாய்வு செய்யப்பட்ட பொழுது, இங்கு கிடைத்த
பொருட்கள் அங்கு வணிகம் சார்ந்த மக்கள் வாழ்ந்து இருக்கலாம் என்றும், அண்டை நாடுகளான
எகிப்து,சீனா, ஐரோப்பா போன்ற
நாடுகளுடன் கப்பல் போக்குவரத்து இருந்து இருக்கலாம் என்பதற்கு ஆதாரம் சங்க இலக்கிய
நூல்களுடன் ஒத்துபோகிறது.
நமக்கு மிக முக்கிய ஆய்வு ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு சொல்லலாம்.
அரிக்கமேடு சங்க இலக்கிய கால ஆய்வு போன்றது
என்றால், ஆதிச்சநல்லூர்
ஆய்வு சிந்து சமவெளி இணையான ஆய்வு என்று கூறலாம் சிந்து சமவெளி ஆய்வில் என்ன முத்திரை, ஓவியம் கிடைத்ததோ
அதே போன்று பொருட்கள் தான் ஆதிச்சநல்லூர் ஆய்வில் கிடைத்து இருக்கின்றன. ஆதிச்சநல்லூர்-ன்
தொடர்ச்சியாக தான் இந்த கீழடி ஆய்வும் அங்கு கிடைத்து இருக்கும் பொருட்களும் உள்ளன.
சரி இந்த ஆய்வு நடந்தால் என்ன ஆகும். திராவிட நாகரிகத்தை விட, ஆரிய நாகரிகம் தான் தொன்மையானது என்று புறம் கூறும் ஆரியர்கள் முகத்தில் கரியை பூசியதுபோல் இருக்கும். பின் தமிழர்களே உலகின் தொன்மையான மொழி என்றும், வைகை கரை நாகரிகம் தான் உலகின் தொன்மையான நாகரிகம் என்றும் உறுதி செய்ய பட்டால் அவர்களால் இனி அரசியல் செய்ய முடியாது.
கண்ணதாசன் சொன்னது போல், ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை, என்பது போல், எத்தனை துரோகிகள், எதிரிகள் வந்தாலும் தமிழையும் தமிழ் இனத்தையும் அழிக்க முடியாது அதன் தொன்மையை மறைக்க முடியாது என்பதே நிச்சயம். தமிழர்களே, சாதி-களை மறந்து ஒன்று சேர்ந்து உன் ஒற்றுமையை காட்டு.
Comments
Post a Comment