பகுதி -1
வணக்கம் அன்பு சொந்தங்களே!!!
கலை என்பது, மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை எடுத்து காட்டுவது. நம் முன்னோர்கள் கலைகளை 64 வகைகளாக பிரித்து இருந்தனர். இன்னும் போனால் ஒரு அரசர் ஆய கலை 64 ஐயும் கற்று தெரிந்தவராக இருந்து இருக்க வேண்டும். 64 கலைகள் என்பவற்றில் சிற்பம்,ஓவியம், இசை,நடனம், நாடகம், போர், மருத்துவம், சமையல் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் சிற்ப கலையின் முதிர்ந்த பருவம் கட்டிட கலை.
இந்த கட்டிட கலையை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்று கட்டிட கலைக்கென்று தனி பட்ட பொறியல் படிப்பு, வடிவமைக்க ஒரு தனிப்பட்ட படிப்பு இருந்தாலும், கட்டிடங்கள் தரமாக உள்ளதா என்றால்? இல்லை என்றே வரும். இது போன்று படிப்பு இல்லாமலும், நவீன வசதி இல்லாமலும், தொழில்நுட்பம் இல்லாமலும் எப்படி நம் முன்னோர்கள் நுணுக்கமாகமும், தரமாகவும், இன்று எல்லோரும் வியக்கும் வண்ணம் கலை நயத்துடனும் கட்டினார்கள் என்ற பலரின் கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழர்களின் கட்டிட கலை என்பது, இன்றோ நேற்றோ உருவாகியது அல்ல, நமது கலைகளும், பண்பாடும் தோன்றியது ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 3 முதல் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்.தமிழர்கள் தான் அன்று இருந்த மனிதர்களில் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலத்தில் நிலையாக வாழ்ந்து வருபவர்கள். மற்றவர்கள் நாடோடி வாழ்க்கை தான் வாழ்ந்தார்கள்.அதனால் தான் இவர்கள் கிறிஸ்த்து பிறப்புக்கு முன்பே கட்டிட கலைகளில் உயர்நிலை எட்டியிருந்தார்கள்.
இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வனிக்கத்தலங்கள் , பொதுக் கட்டிடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.ஆனால் அந்த கட்டிடங்கள் எங்கே என்ற கேள்விக்கு, பதில் அழிந்து போய் இருக்க கூடும், யாருக்கு தெரியும், கடலுக்குள் புடைந்தும் போய் இருக்கலாம். என்ன டா இவன் அனுமனாகா சொல்கிறேன் என்றால் ஆம், கி.மு களில் கட்டிய கட்டிடங்கள் பற்றிய விடயங்கள் அனுமானம் மட்டுமே, ஆனால் அது அழிந்த பிறகும், ஒரு சிறந்த கலைஞனால் மட்டுமே, அதை விட சிறந்த கட்டிடங்களை மிக குறுகிய காலத்தில் கட்டி இருக்க முடியும். அவைகளை பற்றி தான் இங்கே காண போகிறோம்.
நம் முன்னோர்கள், தெளிவாக, நுணுக்கமாக, வேலைப்பாடு, தூண், நூல் அளவும் கோணல் இல்லாமல், ஒரே நேர்கோட்டில் அமைத்த ஆயிரம் கால் மண்டபம் என்று கட்டினார்கள் என்றால் அவர்களின் துல்லியமான கணக்கு களும், இன்று அறிந்த நானோ தொழில்நுட்பமும் அதை விட மிகவும் நுணுக்கமான எண்ணிக்கையும் அறிந்து இருந்தான், அவைகளை பற்றி முதலில் பார்ப்போம்
அன்றைய தமிழர்களின் கணிதம் இவ்வாறு இருந்தது, எந்த மொழியிலும் இல்லாத பதின்மம் மதிப்பீடு (Decimal Calculation) எண்கள் தமிழில் இருந்தது
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்.
இப்போ இருக்கும் நானோ தொழில்நுட்பத்தை விட நுணுக்கமான எண்ணிக்கையை நம் முன்னோர்கள் தெரிந்து வைத்து இருந்தான், அதனால் தான் அவன் நூல் இழை அளவு கூட பிசையாமல் கட்டிடங்களை கட்டினான்.
சரி மேற்கொண்டு பார்க்கலாம்
தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழர்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்தார்களோ அங்கெல்லாம் அவன் தன் கலையை வளர்த்தான் அதற்கு ஆதரமாக அங்கு கலை சிற்பங்களை கோவில் என்ற பெயரில் கட்டினான்.
முதலாம் கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை,திருச்சி
சிதம்பரம் நடராஜர் கோவில், சிதம்பரம்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,
ராமேஸ்வரம் கோவில், ராமேஸ்வரம்
இசை தூண்கள், மதுரை,நெல்லை,…
அங்கோர்வாட் கோவில், கம்போடியா
ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்
கங்கை கொண்ட சோழபுரம் கோவில்
வெட்டுவான் கோவில், கழுகு மலை, தூத்துக்குடி
மாமல்லபுரம், காஞ்சிபுரம்
மேலும் சொல்லும் முன் சேர, சோழ,பாண்டிய மன்னர்கள் மட்டும் அல்லாமல் பல்லவ மன்னர்கள் போல் இருந்தவர்களும் தமிழகத்தில் ஆட்சி செய்தனர். அதுமட்டும் அல்லாமல், இங்கே நான் எழுதுவது கி.பி பிறகு மட்டுமே.
கல்லணை : திருச்சி
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் இந்த அணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்று கூட கூறலாம். அன்றைய மன்னர்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் ஆட்சி நடத்தினார்கள் என்பது இதில் இருந்து கூட அறிய முடியும். இன்னும் சொல்ல போனால் இன்று எல்லோரும் சொல்லும் நீர் மேலாண்மையை அன்றே நடைமுறை படுத்தியவன் நம் முன்னோர்கள்.

கல்லணை கட்டிட அமைப்பு :
மணலில் அடித்தளம் அமைத்து கல்லும், களிமண்ணாலும் மட்டுமே கட்டப்பட்டது இந்த ஆணை, இதனாலேயே இதற்கு கல்லணை என்று பெயர் வந்து இருக்க கூடும். கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.

சர் ஆர்தர் காட்டன் – இந்திய நீர் பாசனத்தின் தந்தை:
கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. அப்பொழுது 1829 காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்.

கரிகால சோழன் – மணிமண்டபம்
பழைமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில்:
சிதம்பர கோவில் என்றாலே, எல்லோருக்கும் ரகசியம் தான் நியாபகம் வரும், அப்படி என்ன ரகசியம் இருக்கிறது அங்கு,வாங்க அலசலாம்!

கோவில் கட்டிய காலம்:
இக்கோவிலை 1175 இல் இருந்து 1200 -ம் ஆண்டு கால கட்டதில் கட்டியிருக்க கூடும் என்றும், 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முற்கால சோழர்களால் காட்டியது என்றும் கூறப்படுகிறது.
2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்போ அல்லது 1200-ம் ஆண்டோ, ஆனால் அன்று எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாமல், எப்படி இப்படி ஒரு கோவிலை கட்டி இருக்க முடியும் என்பதும் ஒரு ரகசியமே!!

அப்படி என்ன பெரிசா அந்த கோவிலில் இருக்கு என்று கேக்கலாம். இதோ அதன் கட்டமைப்பு மற்றும் நம் முன்னோர்களின் அறிவியல் திறன்.
1. இந்த ஊருக்கு சிதம்பரம் பெயர் வர காரணமே, இந்த கோவில் தான்.
சிதம்பரம்: (சித் + அம்பரம்) சித் = அறிவு, அம்பரம் = வெட்டவெளி. வெட்டவெளி என்பது வான்வெளியை குறிக்கிறது. வான்வெளியை பற்றிய அறிவு தான் இந்த கோவில்.

2. மனித உடலோடு தொடர்பு :
>இந்த கோவிலில் மொத்தம் 9 வாசல், மனிதனின் மொத்த துளை 9
>இக்கோவில் விமானத்தில் உள்ள பொற்கூரை 21600 தங்க தகடுகளால் வேயப்பட்டுள்ளது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை மூச்சு விடுகிறான்.
>அந்த தகடுகளை பொறுத்த 72000 தங்க ஆணிகள் பயன்படுத்த பட்டுள்ளது.அது மனிதனின் மொத்த நாடிகளின் எண்ணிக்கை ஆகும்.(கண்ணனுக்கு தெரியாத நாடிகளும் அடங்கும்).

முதலில் சொன்னது போல வான்வெளி அறிவு பற்றி சொல்லவே இல்ல என்று கரைத்து கொட்டுவது கேட்க முடிகிறது.
3. இக்கோவிலில் உள்ள பூமியின் காந்த சக்தி மனிதனின் நோயை குணப்படுத்த வல்லது. அணுத்துகள் பற்றி 1800-ம் ஆண்டுகளில் தான் கண்டுபிடிக்க பட்டது. ஆனால் அணுத்துகள் பற்றி நம் முன்னோர்கள் அன்றே அறிந்து இருந்த காரணத்தினால் தான் அணுத்துகள் அசைந்தபடியே இருக்கும் என்பதை உணர்த்த அதை ஆடும் நடராஜர் உருவிலும், அதை பூமியின் காந்த சக்தியின் மைய பகுதியில் கோவிலை கட்டி அந்த அணுவை நடராஜர் காலின் கட்டை விரலில் இருக்குமாறு வடிமைத்தனர்.
4. பொன்னம்பலம் சற்று இடது புறமாக அமைக்கபட்டுள்ளது, இது மனிதனின் இதயம் இடது புறமாக உள்ளதை குறிக்கிறது.நடராஜரின் தாண்டவம் இதய துடிப்பையே குறிக்கிறது.
5. பொன்னம்பலத்தில் உள்ள 28 தூண்கள் 28 ஆகமங்களையும் குறிக்கிறது. இங்கு அமைக்க பட்டுள்ள 64,64 மேற்பலகைகள் 64 கலைகளையும் குறிக்கிறது.பொற்கூரையில் இருக்கும் 9 கலசங்களும், மனிதனின் உடலில் உள்ள 9 வகையான சக்திகளை குறிக்கிறது.
6. அடுத்து அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள் ஆறு சாஸ்திரங்களையும், மற்றொறு மண்டபத்தில் 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கிறது.
திருமந்திரத்தில் தில்லை:
5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருமூலர், திருமந்திரத்தில்
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று தன் பாடலில் சிதம்பரத்தில் மனித ரூபத்தில் சிவனும், சிதம்பரமும், சதாசிவமும், அவர் ஆடும் திருக்கூத்தும் என்று கூறியுள்ளார்.
சிதம்பர ரகசியம்:
எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம், என்ன ரகசியம் இருக்கிறது இந்த கோவிலில். இக்கோவிலில் உள்ள ரகசியம் இதோ!!
இக்கோவிலின் ஐந்து சபைகள் உள்ளன, சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை என்பன அது. அதில் சித்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் ஒரு சிறு நுழைவு வாயில் இருக்கிறது. அங்கும் தீபாராதனை காட்டப்படும்.
திரை விளக்கிய தீபாராதனை காட்டப்படும். உள்ளே, தங்கத்தால் ஆனா வில்வ மாலை சுவற்றில் மாட்ட பட்டு இருக்கும். இதன் பொருள், இங்கு இறைவன் ஆகாய வெளியாக இருப்பதாக உணரப்படுகிறது. இதுவே சிதம்பர ரகசியம் என்றும் கூறப்படுகிறது.
CERN Research-ல் நடராஜர் :
இன்று எவ்ளோவோ தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தாலும், துல்லியமான தொழில்நுட்ப வசதி இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியம் என்று இன்றும் பல ஆராய்ச்சி யாளர்கள் அதியசிக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் ஐரோப்பா வில் உள்ள CERN என்ற இயற்பியல் ஆராய்ச்சி கூடத்தில் அமைத்து உள்ளனர்.

இன்று இருக்கும் விஞ்ஞான கூட போட்டியிட முடியாத அளவிற்கு அன்று நம் முன்னோர்கள் விஞ்ஞானமும், மெய்ஞானமும் கலந்து கட்டிய கட்டிட கலை உலகில் தலை சிறந்தது என்பதற்கு இதுவே சாட்சி.
அடுத்த பகுதில் மீனாட்சி அம்மன் கோவில், ஆயிரம் கால் மண்டபம், மற்றும் தஞ்சை பெரிய கோவில் பற்றி பார்க்கலாம்.
Comments
Post a Comment